இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை... (கோப்புப் படம்)
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்புப் படையின் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

லெபானின் தெற்குப் பகுதியிலுள்ள நபாட்டியா மாகாணத்தில், இஸ்ரேல் ராணுவம், விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்ப்புப் படையின் தளபதி முஹம்மது அஹ்மது காரிஸ் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி இஸ்ரேல் மீது பல முறை தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முஹம்மது அஹ்மது காரிஸ் தெற்கு லெபனான் பகுதிகளில், பயங்கரவாதத்தைப் பரப்பி வந்ததாகவும் இதனால், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான புரிதல்களை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டங்களை இஸ்ரேல் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இத்துடன், ஈரானுடனான போரினால் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

பிரபஞ்சத்தின் ஒரே அழகி... சான்யா மல்ஹோத்ரா!

ரஷியாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது!

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

SCROLL FOR NEXT