ENS
உலகம்

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தகவல்

DIN

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி விட்டதாக உலக நாடுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஈரான் மீதான போரில் இஸ்ரேலின் செலவு குறித்த விவரங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான தற்போதைய போர்ச் சூழலில், ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் (ரூ. 8,659 கோடி) செலவிடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடங்கிய போரின் முதல் 48 மணிநேரத்தில் மட்டும் ரூ. 12,035 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை.

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க: இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

SCROLL FOR NEXT