ஈரானுக்கு எதிராக போர் வேண்டாம் என நடந்த போராட்டத்தில்...  AP
உலகம்

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

DIN

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு இயக்கப்படும் விமானங்கள் ஜூன் 25 வரை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதோடுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபை, செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களையும் (இரு மார்க்கத்திலும்) ஜூன் 24 வரை நிறுத்திவைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபின்லாந்தின் பின்னர் விமான நிறுவனமும் கத்தாருக்கு இயக்கும் விமானங்களை ரத்து செய்துள்ளது. துபைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேற்று (ஜூன் 22) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT