சீன துணை அதிபருடன் அஜித் தோவல் ANI
உலகம்

சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!

சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார்.

DIN

சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்தார். அப்போது மாகாண எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நிலைத்தன்மையையும் காப்பதற்குத் தேவையான உறுதிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சீன துணை அதிபர் ஹான் ஜெங்கையும் அஜித் தோவல் இன்று சந்தித்தார். இது குறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

ஜூன் 24ஆம் தேதி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சீன துணை அதிபர் ஹான் ஜெங் அழைப்பு விடுத்தார். மற்ற தூதுக்குழு தலைவர்களும் இதில் பங்கேற்றனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சீன துணை அதிபர் உடனான சந்திப்பின்போது, இந்தியா - சீனா இடையிலான சமீபத்திய நிகழ்வுகள் குறித்துப் பேசப்பட்டது. இரு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

SCROLL FOR NEXT