டொனால்ட் டிரம்ப்  (கோப்புப் படம்)
உலகம்

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை! - மாற்றி பேசும் டிரம்ப்

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பதைப் பற்றி...

DIN

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்துக்குப் பின்னர், ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நீடித்த போர் நேற்று(ஜூன் 24) முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் ஒப்புக்கொண்டதன் பேரில் இது அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில், பலர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானில், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு அணு சக்தி தளவாடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

இருநாடுகளுக்கும் இடையிலான போரில், ஈரான் உடனடியாக அதன் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

இதற்கிடையில், ஈரானின் தலைமைத் தலைவர் மதகுரு கமேனியைக் கொன்றால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்கும் விதமாகவும் ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்திலும் ‘ஆட்சி மாற்றம் தேவை’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெதர்லாந்தில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் செல்லும் வழியில் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்திந்தார். அப்போது அவரிடம் ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை நம்புகிறீர்களாக எனக் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இல்லை.. ஆட்சி மாற்றம் தொடர்பான யோசனை இருந்தது. ஆனால், இப்போது வேண்டாம். அது குழப்பத்தையே ஏற்படுத்தும். எல்லாம் விரைவில் அமைதியடைவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தையே உருவாக்கும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாம் பார்க்க விரும்பவில்லை” என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், “இது ஆட்சி மாற்றத்தைப் பற்றியது அல்ல” எனக் கூறியிருந்தார். இதற்கு துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் ஆதரளித்துள்ளார்.

இதையும் படிக்க... அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான்: வெற்றி யாருக்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT