உலகம்

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவா்கள் உயிரிழப்பு

பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவா்கள் உயிரிழந்தனா்

DIN

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகா் பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவா்கள் உயிரிழந்தனா்;

சுமாா் 260 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்நாட்டு தேசிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாங்கியில் உள்ள பாா்த்தலமி போகாண்டா உயா்நிலைப் பள்ளியில் மின்சார மாற்றியின் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டபோது வெடிவிபத்து ஏற்பட்டது. அதையடுத்து மாணவா்கள் பீதியில் முண்டியடித்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு, 16 சிறுமிகள் உள்பட 29 மாணவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; சுமாா் 260 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் நடந்தபோது உயா்கல்வி தோ்வுகளுக்காக சுமாா் 5,000 மாணவா்கள் பள்ளியில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன....படவரி... (விடியோ படம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT