கோப்புப் படம் 
உலகம்

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தானில் போலியோ தொற்று பரவுவதைப் பற்றி...

DIN

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று வேகமாகப் பரவு வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதியதாக மற்றொரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 18 மாத பெண் குழந்தை போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. நிகழாண்டு (2025) துவங்கியது முதல் அம்மாகாணத்தில் 7 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் 4 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் - பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலா 1 பாதிப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் 13 பேர் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், பாகிஸ்தானின் 7 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மூலம், வைல்ட் போலியோ வகை - 1 எனும் வைரஸ் பரவி வருவதாக, அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து, பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா மற்றும் சிந்து ஆகிய மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களின் கழிவுநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அந்த மாதிரிகளில் வைல்ட் போலியோ வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, உலகில் போலியோ வைரஸின் பாதிப்பானது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டும் தற்போது பரவலாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்நாடுகளில் போலி தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT