ENS
உலகம்

அடுத்த 2.5 ஆண்டுகளில் வேலை பறிபோகும் அபாயம்! ஏஐ ஆக்கிரமிப்பால் ஊழியர்கள் கவலை!

செய்யறிவு தாக்கத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு வேலைகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்காவின் கருத்துக் கணிப்பில் தகவல்

DIN

செய்யறிவு தாக்கத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு வேலைகள் பாதிக்கப்படும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) தாக்கம் குறித்து பிளைண்ட் குரூப்ஸ் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 74 சதவிகிதத்தினர், அடுத்த மூன்றாண்டுகளில் செய்யறிவால் தங்களின் வேலை பாதிக்கப்படும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மீதமுள்ள 26 சதவிகிதத்தினர், செய்யறிவு எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும், தங்களின் வேலை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

பொதுவாக, பணியிடங்களில் செய்யறிவின் தாக்கம் அடுத்த 2.8 ஆண்டுகளில் ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், செய்யறிவின் தாக்கம் 2.3 ஆண்டுகளிலேயே தெரிந்து விடும் என்று 16 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, செய்யறிவின் தாக்கம் 3 ஆண்டுகளில் தெரியும் என்று புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்கள் (Freshers) கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர்களில் 43 சதவிகிதத்தினர், செய்யறிவால் தங்கள் அன்றாடப் பணிகள் குறைக்கப்பட்டிருப்பதாக அல்லது நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தங்கள் பணியிடங்களில் செய்யறிவு குறித்த தீவிரமான பேச்சுக்கள் அல்லது கவலைகள் இருப்பதாக 23 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.

ஆனால், செய்யறிவு குறித்த எந்த மாற்றமும் தங்கள் பணியிடங்களில் காணவில்லை என்று 30 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் மறைவு: மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

புதுத் திருப்பம்... அங்கிதா ஷர்மா!

சேலை சோலை.... அனன்யா நாகெல்லா

கமகம... சைத்ரா ஆச்சார்!

மேகம் அல்ல... பேர்லே மானே

SCROLL FOR NEXT