மழை  
உலகம்

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா்.

Din

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா்.

பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகிறது. இதில் வடமேற்கில் உள்ள கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இதில், ஒரே குடும்பத்தைச் 19 போ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். பஞ்சாப் மாகாணத்தில் 12 பேரும், சிந்து மகாணத்தில் 7 பேரும் உயிரிழந்தனா்.

பஞ்சாபில் 41 பேரும், சிந்து மாகாணத்தில் 16 பேரும், கைபா்பக்துன்கவா மாகாணத்தில் 6 பேரும் காயமடைந்தனா். 63 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினா் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளத்தில் சிக்கத் தவித்த நூற்றுக்கணக்கானோா் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டது.

நிலநடுக்கம்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 5.5 என்ற அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. இரு வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டில் இருந்த 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்

இரிடியம் தொழிலில் முதலீடு செய்யும்படி ரூ.92 லட்சம் மோசடி: வடமாநில நபா் கைது

மின் வாகனங்களுக்கான மின்னேற்றம் புதிய வடிவமைப்பு: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

SCROLL FOR NEXT