காஸா நகரில் உறவுகளைப் பறிகொடுத்த பெருந்துயரத்தில் மக்கள் படம்| AP
உலகம்

காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!

காஸாவில் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: பாலஸ்தீன மக்கள் 68 பேர் பலி!

DIN

காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு கட்ட தாக்குதல்களில் காஸா நகரில் 47 பேரும், வடக்கு காஸாவில் பலரும் கொல்லப்பட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவில் போர் தொடங்கியதுமுதல் இதுவரை கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 56,500-ஐ கடந்துள்ளது; சுமார் 1,33,419 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக புதியதொரு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் - ஹமாஸ் இருதரப்பிடமும் மத்தியஸ்தம் செய்து வரும் எகிப்து வலியுறுத்தியுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக் 60 நாள்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு அதற்குள் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.

Gaza: Israel bombards killed at least 68 Palestinians

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT