AP
உலகம்

அமெரிக்காவுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம்: உக்ரைனுக்கு ஆதரவாக நார்வே நிறுவனம் நடவடிக்கை

ஸெலென்ஸ்கி - டிரம்ப் காரசார விவாதம் எதிரொலி...

DIN

அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக நார்வே நிறுவனம் அறிவித்திருக்கிறது.

முன்னதாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

இந்த விவகாரம் உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உற்றுநோக்கின், அமெரிக்க தரப்பிலிருந்து சிறிய நாடான உக்ரைனுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நடந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது. இதனையடுத்து, உக்ரைன் தரப்புக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பினரான நார்வேயை சேர்ந்த எரிபொருள் நிறுவனத்திடமிருந்து அமெரிக்காவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐரோப்பிய தேசமான நார்வேயை சேர்ந்த ‘ஹால்ட்பக் பங்கர்ஸ்’ நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்கான எரிபொருள் விநியோகித்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டுவந்த, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகம் தடைபடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், நார்வே துறைமுகங்களில் உள்ள அமெரிக்க ராணுவ கப்பல்கலுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தடைபெறாது கிடைக்கும் என்று அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வரும் நார்வே அரசு உறுதியளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT