உலகம்

ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!

பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்

DIN

உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது. நிறுவனங்களை மறுசீரமைத்தல், செலவுகளைக் குறைத்தல், ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெக் நிறுவனங்கள் பலரும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 16,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மெட்டா, கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ், ஆட்டோடெஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிநீக்கம், ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்க நடவடிக்கைகளைவிட 184 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த பிப்ரவரியில் மெட்டாவில் 3.600 பேரும், ஆட்டோ டெக்கில் 1,350 பேரும், சேல்ஸ்ஃபோர்ஸில் 1,000 பேரும், ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினில் 1,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT