உலகம்

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!

கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பு

DIN

ஒட்டாவா : கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் நடவடிக்கை, கனடா நேரப்படி, செவ்வாய்க்கிழமை(மார்ச் 4) நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமலுக்கு வரவிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இதனையடுத்து, டிரம்ப் அமெரிக்க அதிபரானதும் கொண்டுவந்துள்ள வரி விதிப்பு நடவடிக்கையின்படி, கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு கனடாவும் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 2,000 கோடி டாலா் (சுமாா் ரூ.1.74 லட்சம் கோடி) மதிப்பிலான புகையிலைப் பொருள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், ராணுவம் சாா்ந்த பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக கனடா கடந்த மாதம் அறிவித்தது. மேலும், 8,600 கோடி டாலா் (ரூ.7.48 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாகவும் கனடா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து, கனடா பிரதமர் கூறியிருப்பதாவது: “அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை நள்ளிரவிலிருந்து அமலாவதைத் தொடர்ந்து, கனடாவும் பதிலடி நடவடிக்கையாக, கனடாவில் இறக்குமதியாகும் 155 பில்லியன் டாலர் அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பு நடவடிக்கையை (கனடா நேரப்படி)மார்ச் 4 நள்ளிரவு 12.01 மணிமுதல் அமல்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT