உலகம்

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவோம் -ரஷியா

Din

மாஸ்கோ : அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவாா்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் ஈரான் தொடா்பான அம்சங்களும் இடம் பெறும். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ரஷியா உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான சா்வதேச ஒப்பந்தம் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது நினைவுகூரத்தக்கது.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT