டெஸ்லா காருடன் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டிரம்ப்..  
உலகம்

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை இரவு தனது நெருங்கிய நண்பரும், அரசு செயல் திறன் தலைவரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் டெஸ்லா நிறுவனத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தான் புதிய கார் ஒன்றை வாங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

அதன்படி, வெள்ளை மாளிகையில் சௌத் லார்ன் பகுதியில் விதவிதமான 5 கார்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டன. அதனை டிரம்ப் பார்வையிட்டார். அதில், சிவப்பு நிற டெஸ்லா எஸ் செடான் மாடல் காரை டிரம்ப் தேர்வு செய்தார்.

இந்தக் காருக்கான விலையான 80,000 டாலருக்கான(சுமார் ரூ.69 லட்சம்) காசோலையையும் வழங்கினார் டிரம்ப். இந்த டெஸ்லா காரை வாங்கியதன் மூலம் எலான் மஸ்க்கின் பங்குகள் ஒரே நாளில் 4 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கின்றன.

ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஆதரவளிப்பது அரசின் நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். இருப்பினும் இது தொடர்பாக வெள்ளை மாளிகையிலிருந்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT