உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  AP
உலகம்

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!

உக்ரைன் - அமெரிக்கா பேச்சுவார்த்தை குறித்து...

DIN

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் - ரஷியா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவரும் தூதுக்குழு உறுப்பினருமான பாவ்லோ பாலிசா, “பேச்சுவார்த்தையின்போது எழுப்பப்பட்ட கோரிக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன” எனக் குறிப்பிட்டதாக உக்ரைன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனுடனான உளவுத்துறை தொடர்புகளை இடைநிறுத்தம் செய்திருந்த அமெரிக்கா தற்போது அதனை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சில நாள்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தனது இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 8 மணி நேரம் நீடித்தது. இதில், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பு: போலி டிக்கெட் பரிசோதகா் கைது

ஹாத்வே நிகர லாபம் 46% சரிவு!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

SCROLL FOR NEXT