கோப்புப் படம் AP
உலகம்

ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!

வெடிகுண்டு பார்சல்களை ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பிய நபர் கைது.

DIN

ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷிய போரைத் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி செய்ய ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான குடிமக்களை ரஷியா கைது செய்தது.

இந்த நிலையில், 22 வயது ரஷிய இளைஞர் ஒருவர் ராணுவத்தினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ததற்கான காரணத்தை ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் மாஸ்கோ, வோரோனெஸ், கிரஸ்னோடர், சரடோவ் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு 5 வெடிகுண்டு பார்சல்களை அனுப்பியுள்ளார்.

சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அந்தப் பார்சல்கள் விமான நிலைய சோதனையில் சிக்கியது. பார்சல்களை சோதித்ததில், வாசனைத் திரவியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு அதனுள் வெடிபொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அனைத்து வெடிபொருள்களையும் செயலிழக்க வைத்ததாக ரஷிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் சிறப்புப் படையினர் அதிக பணம் தருவதாகக் கூறி அந்த நபரை இவ்வாறு செய்ய வைத்ததாகவும், பார்சல்களை அனுப்பிய பின்னர் அவர்கள் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உக்ரைன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த காலங்களில் ரஷியாவின் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துள்ளது.

உக்ரைனுக்காக வேலை பார்ப்பதாகச் சந்தேகிக்கப்படும் அனைவரையும் ரஷிய பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாகக் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT