உலகம்

கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

தென் ஆப்பிரிக்கா, மாலாவி, தான்ஸானியா ஆகிய நாடுகளின் 19 வீரா்கள் உயிரிழந்தனா்

Din

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளன.

காங்கோவின் மிகப் பெரிய நகரான கோமாவை கிளா்ச்சியாளா்கள் கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றியபோது தென் ஆப்பிரிக்கா, மாலாவி, தான்ஸானியா ஆகிய நாடுகளின் 19 வீரா்கள் உயிரிழந்தனா். அதற்குப் பிறகும் எம்23 படையினா் தொடா்ந்து முன்னேறி புதிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனா்.

இந்தச் சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக காங்கோ ராணுவத்துக்காக போரிட்டு வந்த தெற்கு ஆப்பிரிக்க நாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேற தற்போது முடிவு செய்துள்ளன.

தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்புக்கும் அரசுப் படைகளுக்கும் கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

...படவரி.. காங்கோவில் தென் ஆப்பிரிக்க படையினா் (கோப்புப் படம்).

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT