லெபனான் எல்லைகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் AP
உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு! 6 பேர் பலி; 4 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்

குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

DIN

லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் தினமும் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாக்கள் மீண்டும் ஆயுதமேந்தாமல் இருப்பதற்காக இந்தத் தாக்குதலை நடத்துவதாக அந்நாடு கூறுகிறது.

தெற்கு லெபனானின் டெளலைன் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (சனிக்கிழமை) இரவு நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். 10க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேபோன்று கடற்கரையையொட்டிய டையர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியா எல்லையையொட்டியுள்ள ஹாவ்ஷ் அல்-சையத் அலி பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தகவலை லெபனான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

லெபனானைத் தாக்கியது ஏன்?

வடக்கு இஸ்ரேலின் எல்லை நகரமான மெதுலா பகுதியை குறிவைத்து 6 ஏவுகணைகளை வீசி லெபனான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவுப் படைகள் நிலைகொண்டுள்ள லெபனானின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை இந்த அமைப்புதான் நடத்தியது என உறுதிப்படுத்த முடியாது. எனினும், அவை ஹிஸ்புல்லா நிலைக் குழுக்களின் மையப் பகுதிகளில் இருந்து நடந்துள்ளது. ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முந்தைய நாளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே இஸ்ரேல் தாக்குதல் குறித்து பேசியுள்ள லெபனான் பிரதமர் நவாஸ் சல்மான், தெற்கு பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆனால், போரை மீண்டும் விரும்பவில்லை என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT