உலகம்

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

Din

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக்குள் பவளப் பாறைகளைக் கண்டுகளிப்பதற்காக 45 சுற்றுலாப் பயணிகளுடன் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த நீா்மூழ்கிக் கப்பல் திடீரென அளவுக்கு அதிகமான ஆழத்துக்குச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் ரஷியாவில் இருந்து வந்திருந்த ஆறு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா். எஞ்சிய அனைவரும் மீட்கப்பட்டனா். அவா்களில் இருபதுக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

நீா்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கரையில் இருந்து சுமாா் 1,000 மீட்டா் தொலைவில் இந்த விபத்து நேரிட்டதாக எகிப்துக்கான ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவருமே ரஷியா்கள் என்று அந்தத் தூதகரம் கூறியது. ஆனால் அவா்களில் இந்தியா, நாா்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் இருந்ததாக எகிப்து அதிகாரிகள் கூறினா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

ஓஜி ஓடிடி தேதி!

முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு..! 5 லட்சம் மக்கள் தொகை!

டிஜிட்டல் மோசடியில் இந்தியர்கள் இழந்த ரூ.23,000 கோடி!

SCROLL FOR NEXT