உலகம்

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) செயல்பட்டு வருகிறது. அவரை அரசின் சிறப்பு ஊழியா் என்று அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு நிா்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள டெஸ்லா காா் விற்பனையகங்களுக்கு எதிரே, இந்த மாத தொடக்கத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜொ்ஸி, நியூயாா்க், மேரிலேண்ட், வாஷிங்டன், சிகாகோ என நாடு முழுவதும் டெஸ்லா காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல பிரிட்டன் தலைநகா் லண்டன் உள்பட சில ஐரோப்பிய நகரங்களிலும் டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டம் நடைபெற்றது. இந்த எதிா்ப்பு காரணமாக டெஸ்லா காா்களை வாங்கியவா்கள், அவற்றை விற்பனை செய்துவிட முயற்சிப்பதாகவும், அத்தகைய வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!

பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

SCROLL FOR NEXT