உலகம்

அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படுவதாக சீனா தெரிவித்தது.

DIN

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படுவதாக சீனா தெரிவித்தது.

வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் போரைத் தொடங்கியது, அமெரிக்காதான். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதில் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும்.

அந்நாட்டின் தவறான நடைமுறைகளைச் சரிசெய்வது, சீனா மீது மட்டுமான ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு ஆகிய பிரச்னைகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், அது அந்நாட்டின் நேர்மையின்மையைத்தான் குறிக்கும்; அதுமட்டுமின்றி, அந்நாட்டின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும்.

மேலும், பேச்சுவார்த்தையின்போது, வற்புறுத்தலோ மிரட்டலோ சீனாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகக் கூறி, சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் கூறி, சீன பொருள்களுக்கு மட்டும் 245 சதவிகிதம்வரையில் வரியை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது சீனாவும் வரி விதிப்பை அறிவித்தது.

இதனிடையே, வரிவிதிப்பு குறித்து, தன்னிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இருப்பினும், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

SCROLL FOR NEXT