கோப்புப் படம் 
உலகம்

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

பாகிஸ்தான் ஊடகங்கள் இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றி போலியான செய்திகளை வெளியிட்டு வருவதைப் பற்றி...

DIN

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்குநாள் விரிசலடைந்து போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவின் முக்கிய ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து அவர்களைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

இந்திய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநரான துணைநிலை ஜெனரல் டி.எஸ். ரானா பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்தமான் நிகோபாரிலுள்ள காலாபானி சிறைச்சாலைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளைப் பரப்பியுள்ளன.

ஆனால், ராணுவ அதிகாரியான டி.எஸ்.ரானா அந்தமான் நிகோபாரின் முப்படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.

இதேபோல், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ராணுவ உயர் அதிகாரியான எம்.வி.சுசீந்திர குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பின.

ஆனால், சுமார் 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிய அவர் கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று தனது ராணுவப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.

இத்துடன், பாகிஸ்தான் மீது போர்த் தாக்குதல் நடத்த மறுத்ததினால், விமானப்படை துணைத் தலைவர், ஏர் மார்ஷல் எஸ்.பி. தர்கர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறி அந்நாட்டைச் சேர்ந்த சில சமூக ஊடகக் கணக்குகளில் போலியான செய்திகள் வெளியாகின.

ஆனால், அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஏர் மார்ஷல் எஸ்.பி.தர்கர் கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று ஓய்வுப் பெற்றார்.

இத்தகைய, போலியான செய்திகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஏனெனில், இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழலைச் சமாளிக்க இந்தியா தயாராக இல்லை எனும் பிம்பத்தை உருவாக்கவே இவ்வாறு பாகிஸ்தான் ஊடகங்கள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தும்பை பூ... நிகிலா விமல்!

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

SCROLL FOR NEXT