முகப்பு
உலகம்

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

மறைந்த போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கிய நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்

Updated On : 5 மே 2025, 5:29 pm IST
மறைந்த போப் தமது திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்தபடி மக்களைச் சந்தித்த போது - AP
பகிர்:

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்.

”குழந்தைகள் புனிதமானவர்கள்!” என்று போப் சொல்லியிருப்பதன்படியே அவரது கடைசி ஆசையும் அவர்களுக்காவே அமைந்திருக்கிறது. தம் இறுதிமூச்சு வரை மனிதநேயத்தையும் கருணையையும் அணிகலன்களாகக் கொண்டிருந்த போப் பிரான்சிஸ், காஸாவில் நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தமது வாகனத்தை அர்ப்பணித்திருக்கிறார்.

மறைந்த போப் பயன்படுத்திய திறந்தவெளி வாகனத்தின் மாதிரி அமைப்பு - AP

அங்கு பல்வேறு தாக்குதல்களில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அவர்களிருக்கும் இடங்களுக்கே இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்பதே அன்னாரது விருப்பமாகும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments