கோப்புப் படம் ANI
உலகம்

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.

DIN

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் டிரோன் மூலமாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் எல்லைப் பகுதியிலும் ராணுவ வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.

லாகூர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்துவதையடுத்து, அங்கிருந்து அமெரிக்கர்கள் வெளியேற பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறவும் அமெரிக்கர்கள் யாரும் அங்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

SCROLL FOR NEXT