பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கோப்புப்படம்.
உலகம்

’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!

உலக வங்கியிடம் பாகிஸ்தான் கூடுதல் கடன் கோரியது பற்றி...

DIN

உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சர்வ சாதாரணமாக இந்தியா முறியடித்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு உலக வங்கியை டேக் செய்து வெளியிட்ட பதிவில்,

“எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 4 ரெளடிகள் கைது

கடலூா் வெள்ளக்கரை: நாளைய மின் தடை

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வெளிமாநில மதுப் புட்டிகள் விற்றவா் கைது

SCROLL FOR NEXT