பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் 
உலகம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பரிசீலிக்கத் தயார்: பாகிஸ்தான் அமைச்சர்

பொறுமையை இழந்துவிட்டதால்தான் தாக்குதல் நடத்தினோம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருக்கிறார்.

DIN

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பரிசீலிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தி நிறுவனத்திடம் பேசிய இஷாக் தார், முடிவெடுக்கும் வாய்ப்பு இந்தியாவிடமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோயி, முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியிருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள போரை நிறுத்துவது, சுமூகமான நிலையை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார்-உடன் தொலைபேசி வாயிலாக மார்கோ ரூபோயி பேசியிருக்கிறார். அப்போது அவரிடமும் இஷாக் தார் இதேக் கருத்தைக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, இந்தியா மீதான பொறுமையை இழந்துவிட்டதால்தான் தாக்குதல் நடத்தினோம். இந்தியா தாக்குதலைத் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிக்கத் தயார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோயிவிடம் இஷாக் தார் கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க.. இந்தியா பதிலடி: செய்திகள் - நேரலை!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT