சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 
உலகம்

சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண் பாலியல் துன்புறுத்தல்: இந்தியருக்குச் சிறை!

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறைத்தண்டனை அளித்தது அந்நாட்டு அரசு..

DIN

பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 தேதியன்று சிங்கப்பூர் எல்லைன்ஸ் விமானத்தில் ரஜத் என்ற பணிப்பெண்ணை இந்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார். அந்த நேரத்தில் பெண் பயணி ஒருவர் கழிப்பறைக்கு வந்ததால், அந்த பணிப்பெண்ணை காப்பாற்ற உதவிசெய்தார்.

இதையடுத்து அந்த பணிப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாங்கி விமான நிலையத்தை அடைந்ததும் காவல்துறையால் இந்தியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் இந்தியருக்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை சிறைத்தண்டனைக் கோரி துணை வழக்குரைஞர் யூஜின் லாவ் தெரிவித்தார்.

மேலும், பணிப்பெண் மனரீதியான பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், இந்தியர் செய்த காரியத்தால் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்தியருக்கு மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT