அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன். 
உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர் பிரச்னை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவரை சந்தித்துள்ளார்.

அப்போது அவருக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.

புற்றுநோய் தீவிரமாக இருந்தாலும் அதனை குணப்படுத்த முடியும் என்று குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பருவமழை முன்னேற்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவானது என்றும் வயதாகும்போது, ​​பெரும்பாலான ஆண்களுக்கு புற்றுநோய் செல்கள் சிறிய அளவில் இருக்கும் என்றும் ஆர்லாண்டோ சிறுநீரக மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜமின் பிரம்பட் கூறினார்.

இதனிடையே ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து தானும், மனைவி மெலானியாவும் கவலையடைந்தோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் பைடன் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT