பிரதிப் படம் ENS
உலகம்

பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அழிக்க வேண்டும் என்று இந்தியா கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னெடுப்பா?

DIN

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 34 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் 34 பேரை பஞ்சாப் மாகாணத்தில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்தது.

தெஹ்ரீக்-இ-தலிபான்-பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அவர்களில் 3 பேர் மோசமான பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியாக பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் 415 ஆபரேஷன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து 5.8 கிலோ வெடிபொருள்கள், கையெறி குண்டுகள், வெடிபொருளை உருவாக்கப் பயன்படும் பொருள்கள், தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை அந்நாட்டு அரசே அழிக்க வேண்டும் என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமையில் தெரிவித்த நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

திட்டங்களில் முதல்வா் பெயா்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

SCROLL FOR NEXT