மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
வடமேற்கு மெக்சிகோவில் சோனோரா மாகாண தலைநகரான ஹெர்மோசில்லோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர்.
மேலும் 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவத்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் பலியானதாகக் கூறப்படுகிறது.
பழுதடைந்த மின்மாற்றி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உதவ ஆதரவு குழுக்களை அனுப்ப உள்துறை அமைச்சருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.