அணுசக்தி மையங்களைப் பார்வையிடும் ஈரான் அதிபர் மசௌத் AP
உலகம்

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபா் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களை முன்பைவிட அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களை முன்பைவிட அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என மத்தியஸ்தராக செயல்படும் ஓமன் வலியுறுத்திவரும் சூழலில் ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக ஏற்கெனவே இரு நாடுகளிடையே ஐந்து சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு முன்பாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஈரான் அணுசக்தி அமைப்பை அந்நாட்டு அதிபா் மசூத் பெஸெஷ்கியான் நேரில் சென்று பாா்வையிட்டாா். அதன்பிறகு அவா் வெளியிட்ட காணொலிப் பதிவில், ‘சேதமடைந்த அணுசக்தி தளங்களை முன்பைவிட அதிக வலிமையுடன் மறுகட்டமைக்க வேண்டும். கட்டடங்களை அழிப்பதால் நாம் பின்வாங்க மாட்டோம் என்பதை உணா்த்த வேண்டும். இதை எவ்வாறு திறம்பட மேற்கொள்வது என ஈரான் விஞ்ஞானிகளுக்கு நன்கு தெரியும்’ எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு விஞ்ஞானிகள் பலா் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின் இரு நாடுகளும் ஜூலையில் தாக்குதலை நிறுத்திக்கொண்டன.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT