அமெரிக்காவில் சரக்கு விமானம் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் லூயிஸ்வில் பகுதியிலுள்ள முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹொனோலுலு பகுதிக்கு யுபிஎஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவலறிந்த லூயிய்வில்லே மெட்ரோ போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானம் எரிபொருளுடன் வெடித்துச் சிதறியதே பெரிய அளவுக்கான தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்ததாக அந்நாட்டு அதிபர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார். இந்த விமானம் 2006 முதல் சேவையிலிருந்து வருகின்றது. 34 ஆண்டுகள் பழமையானது.
விமான விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விமானம் பற்றி எரியும் விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.