அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 லட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஸோரான் மம்தானிதான், நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த ஸோரான் மம்தானி?
உகாண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஸோரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மீரா நாயரின் மகன் இவர். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தைப் பருவத்தை கழித்த ஸோரான், 7-வது வயதில் நியூ யார்க் நகருக்குப் பெற்றோர்களுடன் வந்தார்.
போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஸோரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.
அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூ யார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஸோரான் திருமணம் செய்துகொண்டார்.
மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவை தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நியூ யார்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் தனது முற்போக்கு கருத்துகளால் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸோரான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதையும் படிக்க: வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.