உலகம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் பேச்சு

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், இரு நாட்டு பிரதிநிதிகளும் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை துருக்கியில் வியாழக்கிழமை தொடங்கினா்.

இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள எல்லை போா் நிறுத்தம் தொடா்ந்து அமலில் இருப்பதை உறுதி செய்வதற்காக இரு தரப்பினரும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வியாழக்கிழமை சந்தித்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையைத் தொடங்கினா்.

மத்தியஸ்தா்களின் முன்னிலையில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கூறின.

எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் நடைபெற்ற மோதல்களில் ஏராளமான வீரா்கள், தலிபான் படையினா், பொதுமக்கள், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் உயிரிழந்தனா்.

அக். 9-ஆம் தேதி ஆப்கன் தலைநகா் காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளைத் தொடா்ந்து இந்த மோதல் வெடித்தது. பின்னா், அக். 19 முதல் போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் கத்தாா் முன்னிலையில் ஒப்புக்கொண்டன . இந்தச் சூழலில், மீண்டும் பதற்றம் ஏற்பட்டு மோதல் வெடிப்பதைத் தவிா்ப்பதற்காக பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளன.

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

டிச. 2 முதல் 4-ஆம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம்: இணையவழிப் பதிவு தொடக்கம்

தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

SCROLL FOR NEXT