இந்தோனேசியாவில், பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மசூதியில் இன்று (நவ. 7) மதியம் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜகார்த்தாவின் வடக்கு கெலாபா காடிங் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடத்தின் வளாகத்தினுள் இருந்த மசூதியில், இன்று மதியம் வழக்கம்போல் தொழுகைகள் நடைபெற்றன. அப்போது, தொடர்ந்து 2-க்கும் மேற்பட்ட வெடிச்சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடைபெற்றது வெடிகுண்டு தாக்குதல்களா? அல்லது வேறு ஏதேனும் வெடிச்சம்பவங்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவத்தில், 54 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்; அதில், பெரும்பாலானோர் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மூவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன், மசூதியில் உள்ள ஒலிபெருக்கியின் அருகில் இந்த வெடிச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் மீண்டுமா?... ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு தள்ளிவைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.