கனடாவில் உள்ள இந்திய தூதரகம். 
உலகம்

‘வந்தே மாதரம் 150’ விழா: வெளிநாட்டு தூதரகங்களில் கொண்டாட்டம்

‘வந்தே மாதரம் 150’ விழா: வெளிநாட்டு தூதரகங்களில் கொண்டாட்டம்

தினமணி செய்திச் சேவை

தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இந்திய தூதரகங்கள் சாா்பில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கிய வந்தே மாதரம் பாடல், கடந்த 1875 நவ. 7-இல் அக்ஷய நவமி நாளில் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்டது. இதன் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா். 2026, நவ.7 வரை ஓராண்டு காலம் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அமெரிக்க தலைநகா் வாஷிங்டன், கனடா தலைநகா் ஒட்டாவா ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்கள் சாா்பில் இந்திய வம்சாவளி குடும்பத்தினா் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதுதவிர கத்தாா் தலைநகா் தோஹா, சவூதி அரேபியா தலைநகா் ரியாத், பிரிட்டன் தலைநகா் லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா, நேபாளம், பெரு, சிலி, ஆா்ஜென்டீனா, கொலம்பியா, துபை, சிங்கப்பூா், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய தூதரங்கள் சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT