காஸாவில், போர்நிறுத்தம் அமலில் இருப்பதால் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்களின் மீதான யேமனின் ஹவுதி படைகளின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
காஸாவில், ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கும் இஸ்ரேலுக்கு இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தப் போரில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் படைகள் மற்றும் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதில், செங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இஸ்ரேலின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியும் அந்தக் கப்பல்களின் பாதைகளை முடக்கியும் ஹவுதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் படையினருக்கு ஹவுதிகள் வெளியிட்ட கடிதத்தில், செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்களின் மீதான தங்களது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, அந்தக் கடிதத்தில் கூறப்பட்டதாவது:
“காஸாவில் நடைபெற்று வரும் வளர்ச்சி நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றோம். எதிரிகள் காஸா மீதான அவர்களது வன்முறையைத் தொடர்ந்தால், இஸ்ரேல் மீதான எங்களது ராணுவ நடவடிக்கைகளை நாங்கள் மீண்டும் தொடங்குவோம். செங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இஸ்ரேல் கப்பல்கள் செல்வதற்கு நாங்கள் மீண்டும் தடை விதிப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்கள் மீதான தங்களது தாக்குதல்களை நிறுத்தியது குறித்து யேமனின் ஹவுதிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வரி குறைக்கப்படும்; இந்தியாவுடன் வித்தியாசமான ஒப்பந்தம்! டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.