துருக்கியின் ராணுவ சரக்கு விமான விபத்தில் 20 வீரர்கள் பலியாகினர் ஏபி
உலகம்

ஜார்ஜியா விமான விபத்து! துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தடை!

துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் அனைத்தும் உடனடியாகத் தரையிறக்கப்பட்டுள்ளன...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தால், துருக்கியின் சி-130 ரக ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து துருக்கி நோக்கிச் சென்ற துருக்கி ராணுவத்தின் சரக்கு விமானம், கடந்த நவ.11 ஆம் தேதி ஜார்ஜியா நாட்டில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 20 வீரர்களும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், துருக்கியின் சி-130 ரக ராணுவ சரக்கு விமானங்கள் அனைத்தும் உடனடியாகத் தரையிறக்கப்பட்டு, அவை பறப்பதற்கு துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

இதுபற்றி, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், இந்த விமானங்களில், முழுமையான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நடைபெறவுள்ளதாகவும், இந்தச் சோதனைகளில் தேர்வாகும் விமானங்கள் மட்டுமே மீண்டும் பறக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜார்ஜியாவில் விபத்தில் சிக்கிய துருக்கியின் ராணுவ சரக்கு விமானம், கடந்த 2012 ஆம் ஆண்டு சௌதி அரேபியாவிடம் இருந்து வாங்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு துருக்கியின் விமானப் படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சாட்ஜிபிடி தகவலை நீக்க மறந்த பாகிஸ்தான் முன்னணி நாளிதழ்! குவியும் விமர்சனம்

Turkey's C-130 military cargo planes have been temporarily grounded following a plane crash in Georgia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திரத்தில் 17 மாதங்களில் 120 பில்லியன் டாலர் முதலீடு ஈர்ப்பு!

தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கி கௌரவிப்பு!

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டிரைலர் வெளியீடு!

இந்த வார ஓடிடி படங்கள்!

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவருக்கு அனுமதி மறுப்பு... சர்ச்சையில் சிக்கிய கேரள பள்ளி!

SCROLL FOR NEXT