வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
திட்டமிட்ட படுகொலைகளுக்கு ஷேக் ஹசீனா மூளையாக செயல்பட்டார் என்றும் அவர் செய்தது மனித குலத்திற்கே ஆபத்தானது என்று மரண தண்டனை விதித்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். திரும்பி வருவேன் என தீர்ப்பு வெளியாவதற்கு சற்று முன் ஷேக் ஹசீனா ஆடியோ வெளியிட்டிருந்தார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது.
இதில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் கடந்த ஓராண்டாக தஞ்சமடைந்துள்ளார்.
தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே வன்முறையில் பலர் கொல்லப்பட்டதற்கு எதிராக முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா மற்றும் அப்போதைய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக செய்த குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக ஷேக் ஹசீனா, தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.