டிரம்ப் 
உலகம்

‘ரஷியாவுடன் வா்த்தகம் செய்தால் 500% கூடுதல் வரி’

ரஷியாவுடன் வா்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப்...

தினமணி செய்திச் சேவை

வாஷிங்டன்: ரஷியாவுடன் வா்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்று டிரம்ப்பிடம் செய்தியாளா்கள் கேட்டனா்.

அதற்கு, ‘ரஷியாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் உருவாக்கிவருகிறாா்கள். எந்தவொரு நாடு ரஷியாவுடன் வா்த்தகம் செய்தாலும், அந்த நாட்டுப் பொருள்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும்’ என்றாா் அவா்.

டிரம்ப் குறிப்பிட்ட வரைவு மசோதாவில், ரஷியாவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது 500 சதவீத கூடுதல் இறக்குமதி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"யாரும் என்னைக் கூப்பிடவில்லை!” NDA கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு OPS பதில்!

டிசிஎம் ஸ்ரீராம் 3வது காலாண்டு லாபம் 19% சரிவு!

ஜம்மு: சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி! வெளியேற முடியாமல் தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு!

புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது சமத்துவமில்லாத இந்தியா: காங்கிரஸ்

SCROLL FOR NEXT