ஐக்கிய நாடுகள் அமைப்பு பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தால், பாலஸ்தீன மூத்த அதிகாரிகள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் நடைபெற்ற விழாவில் நேற்று (நவ. 17) பேசிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர், பாலஸ்தீன அதிகாரிகள் அனைவரும் பயங்கரவாதிகள் எனவும், அவர்கள் கொல்லப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது ஐ.நா. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தாலோ, பாலஸ்தீனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரும் குறிவைத்து கொல்லப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கப்பட்டால், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கைது செய்யப்பட்டு, தனிச் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பென் க்விர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு, பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சர் பென் க்விரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் அரசுதான் பொறுப்பு எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காங்கோ அமைச்சர், 20 பேர் சென்ற விமானம் விழுந்து தீப்பற்றி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.