வங்கதேசத்தில் வன்முறையின்போது... படம்: ஏபி.
உலகம்

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலியானதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர்.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் போராட்டங்கள் நடைபெற்ற போராட்டங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில், அங்குள்ள 50 மாவட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டு 25,000 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா, அப்போதைய உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் நேற்று(திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் தலைநகர் டாக்காவில் பல நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தினர்.

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து டாக்கா மற்றும் வங்கதேசத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையினருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடித்தனர். மேலும், கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி அவரை அங்கிருந்து கலைத்தனர்.

இதனால், கோபமடைந்த போராட்டக்காரர்கள், காவல் துறையினர் மீது செங்கல் உள்ளிட்ட பொருள்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவரும், ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு அமைந்துள்ள தன்மோண்டி பகுதிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள கடைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அடித்து உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கடும் பதற்றம் நிலவியது.

இந்தப் போராட்டத்தில் இதுவரை பலர் காயமடைந்துள்ள நிலையில் 2 பேர் பரிதாபமாக பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tear gas, batons, clashes: Bangladesh on boil after Sheikh Hasina verdict, 2 killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! மழைக்கு வாய்ப்பு!

வாக்குச்சாவடி அலுவலர்களே திணறுகிறார்கள்; அசாமுக்கு மட்டும் சலுகை ஏன்? - என்.ஆர். இளங்கோ

தில்லியில் 2 பள்ளிகள், 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

"FESTIVAL OF SPEED” சாகச நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள்! | Coimbatore

SCROLL FOR NEXT