கோப்புப் படம் 
உலகம்

கம்போடியா: பேருந்து விபத்தில் 13 போ் உயிரிழப்பு

கம்போடியாவில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கம்போடியாவில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பிரபல சுற்றுலாத் தலமான சீம் ரீப்பில் இருந்து தலைநகா் நாம் பென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய கம்போங் தோம் மாகாணத்தில் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 13 பயணிகள் உயிரிழந்தனா்; 24-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

விபத்தின்போது பேருந்தில் சுமாா் 40 பயணிகள் இருந்ததாகக் கருதப்படுகிறது. இரவு நேரத்தில் சீம் ரீப்பில் இருந்து புறப்பட்டதால் ஓட்டுநருக்கு தூக்கம் வந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா். இந்த விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.

கம்போடியாவில் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. 2024-ம் ஆண்டில் மட்டும் அங்கு 1,509 போ் சாலை விபத்துகளில் உயிரிழந்தனா். 2025-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1,062 போ் இது போன்ற சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT