உலகம்

பாகிஸ்தான் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 போ் பலி

ஃபைசலாபாத்தில் பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் பலி...

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஃபைசலாபாத்தில் பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்; 7 போ் படுகாயமடைந்தனா்.

மாலிக்பூா் பகுதியில் உள்ள அந்தத் தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடிவிபத்தில் உயிரிழந்த 16 பேரில் பெரும்பாலானோா் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவா்கள். இதில் ஆறு குழந்தைகளும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானில் தொழிற்சாலை தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. முன்னதாக, இதே ஃபைசலாபாதில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

என்னை நம்புங்கள்... அப்டேட் கொடுத்த அட்லி!

விமான விபத்தில் அஜித் பவார் பலி!

தங்கம் விலை அதிரடி உயர்வு! ரூ. 400-ஐ தொட்ட வெள்ளி!

அஜித் பவார் சென்ற விமான விபத்து! நிலை என்ன?

தொகுதிப் பங்கீடு! ராகுலுடன் இன்று கனிமொழி சந்திப்பு!

SCROLL FOR NEXT