வெள்ளம் சூழ்ந்துள்ள வயல்வெளி படம் - ஏபி
உலகம்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

தாய்லாந்தில் தொடரும் கனமழையால் 3 நாள்களில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தாய்லாந்தில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் 3 நாள்களில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சோங்க்லா மாகாணத்திற்குட்பட்ட ஹாட் யாய் மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திக் கடந்த வாரம் முழுக்க தொடர் மழை பெய்தது. தற்போதும் மழை நீடித்து வருவதால், தெற்கு தாய்லாந்தின் மிகப்பெரிய நகரமான ஹாட் யாய் முழுவதையுமே வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இணைய சேவை, குழாய் மூலம் குடிநீர் வழங்கும் சேவை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் நேரில் சென்று பார்வையிட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சர் பிபாட் ரட்சகிட்பிரக்ரான் நேரில் பார்வையிட்டு, வெள்ளத்தை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ராட்சத குழாய்கள் மூலம் முக்கிய சாலைகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நகரம் முழுவதுமே வெள்ள நீர் சூழ்ந்திருந்தாலுமே குழாய்கள் மூலமே அந்நகரத்தில் மக்களுக்கு குடிநீர் விடியோகிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால், குழாய்கள் மூடப்பட்டுள்ளதால், அந்நகரத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கச்சத்தீவு திருவிழா: ஜன. 15 முதல் விண்ணப்பம் விநியோகம்

பொங்கலுக்குள் இனிப்பான செய்தி! மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா?

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT