2026 ஆம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் தில்லியில் 800 பேர் மாயமாகியுள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு தொடங்கி முதல் மாதமான ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில் மட்டும் தலைநகர் தில்லியில், 807 பேர் மாயமாகியுள்ளதாக, காவல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கணக்குகளின்படி, சராசரியாக ஒருநாளுக்கு 54 பேர் மாயமாகியுள்ள நிலையில், முதல் 15 நாள்களில் மட்டும் 509 பெண்கள் மற்றும் சிறுமிகள் மாயமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாயமானவர்களில் 235 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 572 பேரின் நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இத்துடன், இந்த 15 நாள்களில் 191 சிறுவர்கள் மாயமாகியுள்ளனர். ஜன.1 முதல் ஜன.15 வரையில் மட்டும் ஒவ்வொரு நாளுக்கும் 13 சிறுவர்கள் மாயமானது தெரியவந்துள்ளது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் தில்லியில் 14,870 பெண்கள் உள்பட 24,508 பேர் மாயமானதாகக் கூறப்பட்டது. இதில், 9,087 பேர் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.