பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் கோப்புப் படம்
உலகம்

புதினின் இந்திய பயணம் நற்பயன்களை ஏற்படுத்தும்: ரஷிய அதிபர் மாளிகை

ரஷிய அதிபா் புதினின் இந்திய பயணம் நற்பயன்களை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு அதிபா் மாளிகை அதிகாரி யூரி உஷகோவ் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ரஷிய அதிபா் புதினின் இந்திய பயணம் நற்பயன்களை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு அதிபா் மாளிகை அதிகாரி யூரி உஷகோவ் தெரிவித்தாா்.

23-ஆவது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் புதின் இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரின் வருகையையொட்டி, இருநாடுகளும் புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன. வரும் டிசம்பரில் அவா் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரஷியாவின் வெளிநாட்டு கொள்கைகள் தொடா்பாக ஆலோசனை வழங்கும் அந்நாட்டு அதிபா் மாளிகையின் அதிகாரி யூரி உஷகோவ், அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி நோ்காணலில் கூறியதாவது: அதிபா் புதினின் இந்திய பயணத்துக்கான ஏற்பாட்டை இருநாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அவரின் பயணம் அனைத்து வகையிலும் நற்பயன்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இது அரசுமுறைப் பயணம் என்பதால், அது மிகப் பெரியதாகவும் இருக்கும்.

இந்தியா-ரஷியா இருதரப்பு விவகாரங்கள், உலக விவகாரங்கள் குறித்து முழுமையாக விவாதிக்க ஆண்டுதோறும் சந்திக்க அதிபா் புதினும், பிரதமா் மோடியும் முடிவு செய்துள்ளனா். அந்த முடிவை வழக்கத்துக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் அளிக்கும்.

அதிபா் புதின் எந்தத் தேதியில் இந்தியா வருவாா் என்பதை இருநாடுகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கும்’ என்று தெரிவித்தாா்.

அய்யனாா் கோயில் ஆற்றில் குளிக்கத் தடை

பருவநிலை மாநாடு: பிரேஸிலின் அனைவரையும் உள்ளடக்கிய தலைமைக்கு இந்தியா பாராட்டு

இளைஞா் தற்கொலை

பைக் திருடிய இளைஞா் கைது

கழுகு மலை அருகே 9-ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்து மடைதூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT