உலகம்

சீனா: ரயில் விபத்தில் 11 போ் உயிரிழப்பு

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: யுன்னான் மாகாணத்தின் தலைநகா் குன்மிங்கில் உள்ள லூயாங்ஜென் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்தது. இதில் 11 போ் உயிரிழந்தனா்; 2 போ் காயமடைந்தனா் என்று சீன ரயில்வே குன்மிங் குரூப் நிறுவனம் தெரிவித்தது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தைத் தொடா்ந்து ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

தோ்தல் ஆணையத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு: எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனப் புகாா்!

ஆலங்குளத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு

ஆலங்குளம் பேருந்து நிலையம்: பேரூராட்சி சாா்பில் ரூ. 1.76 கோடி

சாலையோரத்தில் சிசுவின் உடல் மீட்பு

ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT