இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள வரைபடத்துடன் கூடிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன... PTI
உலகம்

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடம்! நேபாளம் வெளியிட்ட புதிய பணத்தாளால் சர்ச்சை!

நேபாளத்தில் இந்தியப் பகுதிகளுடன் கூடிய வரைபடத்துடன் புதிய பணத்தாள்கள் வெளியாகியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாளத்தில், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள வரைபடத்துடன் கூடிய புதிய ரூ.100 பணத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உத்தரகண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உரிமைக்கோரி வருகின்றன. இதனால், மூன்று நாடுகள் இடையில் எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.100 பணத்தாள்களில் கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா பகுதிகளை உள்ளடக்கிய நேபாள வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பணத்தாள்கள், கடந்த 2024 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி, நேபாள ராஷ்டிர வங்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், நேபாள வரைப்படம் பழைய ரூ.100 பணத்தாள்களிலும் அச்சிடப்பட்டிருந்ததாகவும், அரசின் முடிவின்படி தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது.

இந்த வரைப்படத்துக்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும், அந்த வரைபடம் நேபாளத்தின் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

In Nepal, new Rs. 100 banknotes have been issued with a map of Nepal that includes Indian territories.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலையே பாதி மாயம் செய்யும்... கல்பனா சர்மா!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

SCROLL FOR NEXT